சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி |
விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத் அடுத்ததாக ‛விட்னஸ்' என்னும் படத்தில் நடிக்கிறார். தீபக் என்பவர் இயக்கும் இப்படத்தில் நடிகை ரோகினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மனித கழிவுகளை அகற்றும் மனிதர்களை பற்றிய கதையாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இப்படம் குறித்து நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‛தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் இந்த “விட்னஸ்” திரைப்படம், பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.