தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

'தூங்காவனம்', 'கடாரம் கொண்டான்' மற்றும் 'இரை' வெப் சிரீஸ் போன்ற ஸ்டைலிஷ் த்ரில்லர் கதைகளை இயக்கியவர் ராஜேஷ் எம் செல்வா. இவர் இயக்கிய 'தி கேம் : யு நெவர் பிளே அலோன்' என்ற வெப் சீரிஸ் நாளை நெட்பிளிக்சில் ரிலீஸாகிறது. ஏழு எபிசோடுகளை கொண்ட இதில் விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் பேசுகையில், ‛‛கேமிங் துறையில் பணிபுரியும் திருமணமான தம்பதிகள் பற்றி இந்தத் தொடர் பேசுகிறது. இன்றைய சமூகவலைதளங்கள் எப்படி அவர்களது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் தலையிடுகிறது என்பதையும் காட்டியுள்ளோம். இதுமட்டுமல்லாது பெண் காவல் அதிகாரி, 15 வயது பெண் மற்றும் 65 வயதுடைய வசந்தா என இவர்கள் வாழ்விலும் சமூகவலைதளம் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் இதில் பார்க்கலாம்'' என்கிறார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறுகையில், "தனது வேலையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு மிக்க கேம் டெவலப்பர் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சமூகவலைதளதங்களில் எதையும் தைரியமாக பேசுபவள் . இதனால் அவளுக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் அதைவிட அதிக வெறுப்பும் கிடைக்கிறது. இது அவளுக்கு தனிப்பட்ட வாழ்விலும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதில் இருந்து தனது குடும்பத்தையும் சொந்தங்களையும் எப்படி காக்கிறாள் என்பதுதான் கதை. வேலையையும், தனிப்பட்ட பொறுப்புகளையும் குழப்பிக் கொள்ளும் பெரும்பாலான தற்கால மாடர்ன் பெண்களை இந்த கதாபாத்திரம் பிரதிபலிக்கும்". என்கிறார்.