'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு இவன் தந்திரன், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, ரிச்சி, மாறா உள்பட பல படங்களில் நடித்தார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற அவர் அங்கு நீச்சல் உடையில் தான் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதுவரை தான் நடித்த படங்களிலேயே நீச்சல் உடை அணிந்து நடிக்காத ஷ்ரத்தா ஸ்ரீநாத், முதன்முறையாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.