ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் . 2018ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்த திரைப்படம் 'ஐங்கரன்'. இந்த படத்தை 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமரே இசையமைத்துள்ளார். மகிமா நம்பியார் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் 2019ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.
கொரோனா ஊடரங்கு காரணமாக வெளியாகாமல் இருந்த இப்படம் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் வருகின்ற மே 5-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட இப்படம் இந்த முறையாவது சொன்ன தேதியில் வெளியாகுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .