பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி |
2017-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழில் '100% காதல்', 'கொரில்லா', 'சைலன்ஸ்' போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 'ஜெயேஸ்பாய் ஜோர்தார்' என்ற ஹிந்தி படத்தில் ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ஷாலினி பாண்டே பேசும்போது, “நான் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது தந்தையின் விருப்பம். நானும் அவருக்காக படிக்கத் தொடங்கினேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு அது பிடிக்கவில்லை. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இதற்காக வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன். மனதுக்கு கஷ்டம் தான். ஆனால் இப்போது பெற்றோர்கள் என்னை பெருமையாக நினைப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார் .