என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வருகிற ஜூன் 3ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த விக்ரம் படத்தின் விளம்பரம் ரயில்களில் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த வீடியோவை கமலஹாசன் வெளியிட்டுள்ளார்.
அதோடு ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ‛‛ரயில் பயணம் எனக்கு பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபம் என்பதால் இன்னும் பிடிக்கும். என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம் பிறை, மகாநதி, தேவர் மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்போது என் படத்தை தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியை தருகிறது'' என்று கமல்ஹாசன் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.