பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நேற்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா குறித்து வழக்கம் போல் உருகி உருகி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
அதில், ‛‛அன்புள்ள தங்கமே. இப்போது நீ என் கண்மணி. என்னுடைய வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி. என்னுடைய முதுகில் தட்டிக் கொடுப்பதே ஒரு இனிமை. எனக்காக நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய். ஒவ்வொரு முறையும் நான் என் வாழ்வில் தாழ்வாக உணரும் போது நீ என்னுடன் இருக்கிறாய். என்னை முடிவுகள் எடுக்க வைத்தது மட்டுமின்றி நீ எவ்வளவு உறுதியாக இருந்தாய் என்பது நன்றாக தெரியும். என்னுடைய படத்தையும் முழுமை படுத்தியது நீதான். இந்த படத்தின் வெற்றி உன்னுடைய வெற்றி.
நீ திரையுலகில் ஜொலிப்பதை பார்க்கவும் மீண்டும் உன்னை இயக்கி மிகச் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு இயக்குனராக மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. உன்னுடைய புத்திசாலித்தனம் எப்போதுமே என்னைக் கவரும். நாம் திட்டமிட்டபடி ஒரு நல்ல படத்தை இயக்கி காதம்பரிக்கு இணையான நல்ல கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. கண்மணி உனக்கு பிடிக்கும் என் நம்புகிறேன். எல்லாம் காதலே நன்றி'' என அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். அதோடு நயன்தாரா தன் முதுகில் தட்டிக் கொடுக்கும் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.