ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்திருக்கும் படம் விக்ரம். வருகிற ஜூன் 3ம் தேதி வெளிவருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஷிவானி மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் கதை கசிந்தது. அதன்படி கமல் ஒரு சிறைத்துறை அதிகாரி. அந்த சிறையில் கொடூர குற்றம் செய்த கைதியாக இருக்கிறார் விஜய்சேதுபதி. அவரை தப்பிக்க வைக்க அந்த சிறைக்குள் வருகிறார் சர்வதேச எஸ்கேப் ஸ்பெஷலிஸ்ட்டான பகத் பாசில். சிறைக்குள் இந்த மூவருக்குள்ளும் நடக்கும் போராட்டம் தான் கதை என்கிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அடங்கிய ஸ்கிரிப்டை இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழ் முறைப்படி பதிவு செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ். அதனால் இந்த படத்தின் கதை எனது கதை என்று யாரும் வழக்கு தொடர முடியாது. படத்தின் கதையையோ, காட்சியையோ யாரும் காப்பி அடிக்கவும் முடியாது.