ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
பொதுவாக மலையாளத்தில் ஹிட் அடித்த படம் ஒன்றை மற்ற தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்காக போட்டி போட்டு வாங்குவார்கள். ஆனால் ஒவ்வொரு மொழி ரீமேக்கும் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியாவது தான் வழக்கம். இதற்கு முன்னதாக திலீப் நடித்த பாடிகார்ட், மோகன்லால் நடித்த திரிஷ்யம் ஆகிய படங்களின் ரீமேக்குகள் இந்த விதமாகத்தான் வெளியாகி உள்ளன.
அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜோசப் என்கிற படமும் இதே போல தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. இந்த நிலையில் தமிழில் இதன் ரீமேக்கில் ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்க ஒரிஜினலை இயக்கிய இயக்குனர் பத்மகுமார் தமிழிலும் இயக்கியுள்ளார். விசித்திரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் வரும் மே 6ம் தேதி ரிலீசாக உள்ளது.
அதேபோல இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டாக்டர் ராஜசேகர் நடித்துள்ளார். சேகர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அவரது மனைவி ஜீவிதா இயக்கியுள்ளார் நேற்று நடைபெற்ற சேகர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இந்த படம் மே 20ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு மலையாள படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்குகள் ஒரே சமயத்தில் அதிலும் 15 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்த வெளியாகிறது என்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான்.