நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் | முக்குத்தி அம்மன் 2 கிளைமாக்ஸ் : சென்டிமென்ட் ஆக குஷ்பு ஆடுகிறாரா? | அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கிரைம் கதை | யாருக்கோ... ஏதோ சொல்கிறார் தீபிகா படுகோனே… | மீண்டும் ஓடிடியில் 'குட் பேட் அக்லி' : இளையராஜா பாடல்கள் மாற்றம் | 2026 ஆஸ்கர் - இந்தியா சார்பில் தேர்வான 'ஹோம்பவுண்ட்' | விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை |
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான 'திரிஷ்யம்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மலையாள சினிமாவின் முதல் 50 கோடி வசூல் படம் என்கிற பெருமையை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் ஓடிடியில் வெளியானாலும் கூட அந்த படமும் முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தில் தனது மனைவி கொலை செய்த போலீஸ் அதிகாரியின் மகன் உடலை, மோகன்லால் யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவாறு போலீஸ் ஸ்டேஷனுக்குள் அதுவும் இன்ஸ்பெக்டர் அறையில் புதைத்து வைப்பார். இந்த விஷயம் ரசிகர்களிடம் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியதுடன் இப்படி ஒரு கிளைமாக்ஸை வைத்ததற்காக ஜீத்து ஜோசப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்திற்காக முதலில் தான் யோசித்து வைத்திருந்த கிளைமாக்ஸ் வேறு என்று கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் இறுதி காட்சியில் இறந்த இளைஞனின் உடலை ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு அந்த இடத்தின் மேலேயே நின்று மோகன்லாலும் அந்த இளைஞனின் பெற்றோரும் உருக்கமாக பேசுவது போல தான் கிளைமாக்ஸ் காட்சியை உருவாக்கி இருந்தேன். ஆனால் அது ஏதேச்சையாக அமைந்தது போல இல்லாமல் சுவாரசியத்திற்காக ஏதோ தற்செயலாக திணிக்கப்பட்டது போல எனக்கு தோன்றியது. அந்த சமயத்தில் நான் கேரள போலீஸுக்காக ஒரு டாக்குமென்டரி படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எனக்கு திடீரென போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே அந்த உடலை புதைத்தால் என்ன என்று தோன்றியது. அதன் பிறகு தான் படத்தின் கிளைமாக்ஸை மாற்றினேன்” என்று கூறியுள்ளார்.