படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜீவிதா. நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தற்போது இவர்களின் மகள்கள் இருவரும் நடித்து வருகிறார்கள். ஜீவிதாவும், ராஜசேகரும் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜீவிதாவும், ராஜசேகரும் கருட வேகா என்ற படத்தை தயாரிக்க ஆந்திராவை சேர்ந்த ஜியோ ஸ்டார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 26 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். கடனை திருப்பி செலுத்த அவர்கள் கொடுத்த காசோலை பணமின்றி திரும்பி உள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோட்டீஸ்வர ராஜூ, நிர்வாக இயக்குனர் ஹேமா ஆகியோர் ஜீவிதா மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் ஜீவிதாவுக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இது குறித்து ஜீவிதா கூறியிருப்பதாவது: என் மீது தொடரப்பட்டுள்ள செக் மோசடி வழக்கே மோசடியானது. என் மீது எந்த தவறும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதனை சட்டப்படி சந்திப்பேன். என்று கூறியிருக்கிறார்.