ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, ‛உயிர், மிருகம்' போன்ற படங்களை இயக்கியஇயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் 'அக்காகுருவி'. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பி.வி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மே 6ம் தேதி தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது. இசை வெளியீடு நாளை (ஏப்.,25) நடக்கிறது. உலகப்புகழ் பெற்ற திரைப்படமான ‛சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன், தங்கை என இரு குழந்தைகள், இவர்களுக்கிடையே ஒரு 'ஷீ' - இதை, மனதை உலுக்கும் அற்புத படைப்பாக இயக்குனர் சாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் 3 பாடல்களையும் இசையமைப்பாளர் இளையராஜா தானே எழுதி இசையமைத்துள்ளார். இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.