ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
முன்னணி நடிகர் நடிகைகளில் பலர் விதவிதமான கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுபவர்களாகவே இருக்கின்றனர். குறிப்பாக மார்க்கெட்டில் புதிதாக வரும் கார்களை உடனடியாக வாங்கி தங்கள் வீட்டில் நிறுத்தி வைப்பதை ஒரு கவுரவமாகவும் கருதுகின்றனர். அதிலும் தற்போது இரு சக்கர வாகனங்களை போல கார்களிலும் எலக்ட்ரிக் கார்கள் வந்துவிட்டன. அந்தவகையில் தற்போது நடிகர் மகேஷ்பாபு ஆடி எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த காரின் முன்பாக நின்று போஸ் கொடுக்கும் தனது புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவை வெளியிட்டு இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ளார் மகேஷ்பாபு. சமீபத்தில் நடைபெற்ற 2022ம் வருடத்திற்கான சிறந்த கார் விருதுகள் போட்டியில் கலந்து கொண்டு உலக பர்பாமன்ஸ் கார் என்கிற விருதை பெற்றுள்ளது ஆடி ஈ-ட்ரான் என்கிற இந்த கார். மூன்று விதமான மாடல்களில் வெளியாகியுள்ள இந்த காரின் விலை சுமார் ஒரு கோடியிலிருந்து 1.20 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது..