ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே, இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர் படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். நேற்று மாலை சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் பூஜா. அப்போது ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, பீஸ்ட் படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் தான் நடித்து இருப்பதாக தெரிவித்தவர் , இன்னொரு கேள்விக்கு பீஸ்ட் நாயகன் விஜய் ஆக இருந்த போதும், நிஜ வாழ்க்கையில் பீஸ்ட் யார் என்று கேட்டால் இயக்குனர் நெல்சன் என்று தான் நான் கூறுவேன் என ஒரு பதில் கொடுத்துள்ளார் பூஜா. அதுமட்டுமின்றி விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்த அனுபவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அது மிகவும் கலகலப்பாக இருந்தது. அந்த பயணத்தை என்னால் மறக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.