நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கி உள்ள படம் மன்மதலீலை. இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்பட பலர் நடித்திருக்கிறார்ள். இதனை ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
நாளை (ஏப் 1) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் குத்து படத்தை தயாரித்த பிளையிங் ஹார்ஸ் நிறுவனம் படத்துக்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில் "எங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை படத்தின் வினியோக உரிமையை, ராக் போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கி இருந்தது. படத்தால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி எங்களுக்கு தர வேண்டிய ஒரு கோடியே 40 லட்சம் 42 ஆயிரத்து 732 ரூபாயை வழங்கவில்லை.
இந்த நிலையில் அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை என்ற படத்தை தயாரித்துள்ளது. எங்களுக்கு தர வேண்டிய தொகையை தராவிட்டால் மன்மதலீலை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மன்மதலீலை தயாரிப்பாளர், 30 லட்சம் ரூபாயை 4 வாரங்களில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையுடன் மன்மதலீலை படத்தை வெளியிட அனுமதி வழங்கியது. அதோடு இந்த பிரச்சினையை சமரச தீர்வு மையத்தில் பேசி தீர்த்துக் கொள்ளுமாறும் உத்தரவிட்டது. இதன் மூலம் நாளை மன்மதலீலை வெளியாவது உறுதியாகி இருக்கிறது.