மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வினோத் இயக்கத்தில் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்த 'வலிமை' படம் கடந்த மாதம் பிப்., 24ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியான ஒரு மாதத்தில் மார்ச் 25ம் தேதி இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டார்கள்.
வெளியான 24 மணி நேரத்தில் “100 மில்லியன் ஓடிய நேரம்” என்றும் 48 மணி நேரத்தில் “200 மில்லியன் ஓடிய நேரம்” என்றும் இதை சாதனையாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே பகிர்ந்துள்ளார். இது என்ன 'ஓடிய நேரம்' என்ற கணக்கு, புதிதாக இருக்கிறதே என ரசிகர்களுக்கு சந்தேகம் இருக்கலாம். அதாவது, ஓடிடி தளத்தில் அந்தப் படம் அன்றைய தினத்தில் மொத்தமாகப் பார்க்கப்பட்ட நேரங்களை அது குறிக்கும்.
'வலிமை' படம் ஓடிடி தளத்தில் நான்கு மொழிகளில் வெளியாகி உள்ளது. நீளம் குறைக்கப்பட்டு தமிழ் மொழியில் 2 மணி நேரம் 40 நிமிடப் படமாக இடம் பெற்றுள்ளது. மற்ற மொழிகளான ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகியவற்றில் சில நிமிடங்கள் கூடுதலாகவும், குறைவாகவும் உள்ளது.
சராசரியாக 2 மணி நேரம் 40 நிமிடம் என எடுத்துக் கொண்டாலும், 100 மில்லியன் 'ஓடிய நேரம்' என்பதை கணக்கிட்டால் 6 லட்சத்து 25 ஆயிரம் முறை முழு படமும் ஓடிய நேரம் என்ற கணக்கு வரும். 200 மில்லியன் கணக்கிற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் முறை. இது நான்கு மொழிகளையும் சேர்த்த ஒரு கணக்கு. இத்தனை முறை மட்டுமே பார்க்கப்பட்ட ஒரு படத்துக்கு 200 மில்லியன் ஓடிய நேரம் என ஒரு பிரம்மாண்டத்தை எதற்கு கண் முன் காட்ட நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை என சமூக வலைத்தளங்களில் ஆச்சரியப்படுகிறார்கள்.
ஒரு மாதம் கழித்து ஓடிடிக்கு வந்த இந்தப் படத்திற்கே இத்தனை 'ஓடிய நேரம்' கணக்கு என்றால் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு எவ்வளவு நேரம் கிடைக்கும் ?, அப்படி வெளியிட்டவர்கள் சொல்வார்களா ?.