இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்துள்ள 'கேஜிஎப் 2' படத்தின் டிரைலர் நேற்று மாலை கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் யு டியுபில் வெளியானது.
நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'கேஜிஎப்' முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இரண்டாம் பாகத்தின் டீசர் கடந்த வருடம் ஜனவரியில் வெளியாகி 248 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது.
நேற்று வெளியான டிரைலர் ஐந்து மொழிக்குமாக சேர்த்து 24 மணி நேரத்திற்குள்ளாக 100 மில்லியன் பார்வைகளை தாண்டியது. ஹிந்தி டிரைலர் 48 மில்லியன், கன்னட டிரைலர் 18 மில்லியன், தெலுங்கு டிரைலர் 19 மில்லியன் தமிழ் டிரைலர் 11 மில்லியன், மலையாள டிரைலர் 7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் 'ஆர்ஆர்ஆர்' பட டிரைலர் 24 மணி நேரத்தில் 51 மில்லியன் பார்வைகள் பெற்ற சாதனையை 'கேஜிஎப் 2' டிரைலர் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்று முறியடித்துள்ளது.