டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

மாநாடு படத்தையடுத்து அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் மன்மதலீலை. அடல்ட் காமெடியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சென்சார்போர்டு ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோ கடந்த மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது மன்மதலீலை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆபாச வசனங்கள், உதட்டு முத்த காட்சிகள் என முழு அடல்ட் காமெடி கதையில் உருவாகி இருக்கும் இந்த டிரைலரை பார்த்துவிட்டு மங்காத்தா, மாநாடு படங்களை இயக்கிய வெங்கட்பிரபுவா? இப்படி ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
இதுப்பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு இப்பட விழாவில் பேசியதாவது : இந்த கதை என்னுடைய உதவியாளர் மணிவண்ணன் உருவாக்கியது. கொரோனா காலகட்டத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்யலாம் என்று யோசித்தபோது தான் இந்த கதை உருவானது. இது ஒரு அற்புதமான கதை. இந்த படத்திற்கு பிறகு மணிவண்ணன் பெரிய இடத்துக்கு சென்று விடுவார் என்று கூறிய வெங்கட்பிரபு, அசோக் செல்வன் இடத்தில் இந்த கதையை சொன்னபோது உடனே ஓகே சொல்லிவிட்டா. எல்லோரும் நினைப்பது போன்று இந்த படம் கண்டிப்பாக கில்மா படம் இல்லை. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் அப்படிப்பட்ட படம் எடுக்க மாட்டேன். கண்டிப்பாக இப்படம் அனைவரும் ரசிக்கும் படியான படமாக இருக்கும் என்றார்.
இந்த படம் ஏப்ரல் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது.




