லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் | 'வா வாத்தியார்' : இப்போது வர மாட்டார் ? |
பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் சர்காரு வாரி பாட்டா. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படம் மே மாதம் 12ல் திரைக்கு வருகிறது. இப்படத்தில் இருந்து ‛பென்னி' என்ற இரண்டாவது பாடலை நேற்று வெளியிட்டனர். இதில், மகேஷ்பாபு மட்டுமின்றி அவரது மகள் சித்தாராவும் நடனமாடியிருக்கிறார். இதன்மூலம் மகளை தனது படத்திலேயே அறிமுகம் செய்துள்ளார் மகேஷ் பாபு. இதனால் அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் 20 மணிநேரத்தில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளும், 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் இந்த பாடலுக்கு கிடைத்துள்ளது.
தெலுங்கில் வம்சி இயக்கும் விஜய் 66வது படத்தில் தான் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா அறிமுகமாக போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் சர்காரு வாரி பாட்டா படத்திலேயே அறிமுகமாகியிருக்கிறார்.