பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படம் இந்த வாரம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ஒரு சில பிரம்மாண்ட படங்கள் இந்திய மொழிகளில் வெளிவந்திருந்தாலும் இந்தப் படம் அளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் வெளியாகும் இப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கு மாநிலங்களான தெலங்கானா, ஆந்திராவில் சில தியேட்டர்களில் முதல் நாள் காட்சிகளுக்கான முன்பதிவு ஆரம்பமான சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது. ஜுனியர் என்டிஆர், ராம் சரண் என இரண்டு முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் ரசிகர்களும் போட்டி போட்டு படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்படம் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைக்குமா என இந்தியத் திரையுலகத்தில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 'பாகுபலி 2' படம் முதல் நாளில் சுமார் 120 கோடி வசூலைப் பெற்றது. இப்போது டிக்கெட்டுகள் விலை அதிகமாகி உள்ளதால் வசூல் தொகை இன்னும் அதிகமாகலாம். படத்திற்கான ரிப்போர்ட் நன்றாக அமைந்துவிட்டால் முதல் வார இறுதி வசூல் முந்தைய அளவில் இல்லாத அளவிற்கு இருக்கும் என்கிறார்கள்.