Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூன் 3ல் வெளியாகிறது கமலின் ‛விக்ரம்'

14 மார், 2022 - 07:22 IST
எழுத்தின் அளவு:
Kamal's-'Vikram'-to-be-released-on-June-3

‛மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை இயக்கும் படம் 'விக்ரம்'. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், பிக்பாஸ் ஷிவானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோருக்கு தனித்தனியாக தீம் மியூசிக்கை அனிருத் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், 'விக்ரம்' படத்தின் வெளியீட்டுத் தேதியை இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 36வது பிறந்தநாளான இன்று (மார்ச் 14) அறிவிப்பதாக தெரிவித்தனர். அதன்படி, காலை 7 மணியளவில் படம் வெளியீட்டு தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. வரும் ஜூன் 3ம் தேதி படம் வெளியாகும் என்பதை, படத்தின் மேக்கிங் வீடியோவை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
"காட்டுத்தீயில் இருந்து கொடைக்கானலை காப்பாற்ற வேண்டும் " - கார்த்தி வேண்டுகோள்"காட்டுத்தீயில் இருந்து ... கமல்ஹாசன் வாழ்த்தும், லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சியும்… கமல்ஹாசன் வாழ்த்தும், லோகேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)