தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கேரள கரையில் நடிகராக கலக்கி தமிழ் திரையில் அறிமுகமாகி சாக்லேட் பாய் என பட்டம் வாங்கி, தமிழில் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கிய 'ஹே சினாமிகா' படத்தில் காமெடி கலந்த ஹிரோவாக நடித்திருக்கும் துல்கர் சல்மான் மனம் திறக்கிறார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி சொல்லுங்க
தமிழ்நாடு வந்தால் பாசம் காட்டுறாங்க. ஏன் நிறைய படம் பண்ணலைனு கேட்குறாங்க. நானும் தமிழ் சினிமால இருக்கேன்னு சந்தோஷமா இருக்கு
இயக்குனர் பிருந்தா குறித்து
'உஸ்தாத் ஹோட்டல்' படம் கொடுத்த அன்வர் என் குரு. ரொமான்ஸ் ஹீரோவா நான் பாடல் செய்ய பிருந்தா மாஸ்டர் தான் காரணம்... அவங்க 'ஹே சினாமிக்கா' படம் இயக்குவாங்கனு எதிர்பாக்கலை. இந்த படம் புது அனுபவம் கொடுத்தது.
'ஹே சினாமிகா' படத்தோட ரிசல்ட் என்ன
மதன் கார்க்கி கதை, வசனத்தில் ஆழமான படமாக மக்களிடம் சேர்ந்திருக்கும்னு நம்புறேன். ரேடியோ ஜாக்கியா நடிச்சிருக்கேன். படத்தில் கோவிந்த வசந்தா இசையில் அச்சம் இல்லை என்ற பாட்டும் பாடியிருக்கேன்.
'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்'...
எல்லா மொழிகளிலும் நடிப்பதால் சிரமமாக இருக்கு. அதனால் தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்க்கு பிறகு அதிகம் நடிக்கலை. போன வருஷம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மலையாளம், ஒரு வெப் சீரியஸ் கூட நடித்தேன்
சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறதே
நான் இவ்வளவு துாரம் வருவேன்னு எதிர்பார்க்கலை. எதுவும் திட்டமிடவில்லை.
அப்பா உங்க கதை தேர்வுக்கு உதவி செய்வாரா
அப்பா அவர் படங்களில் பிஸி... முடிந்தவரை நான் கதை கேட்பேன். நேரம் இருந்தால் அப்பாவிடம் கதை கேட்க சொல்வேன் அவ்ளோதான்..
அப்பாவும் நீங்களும் சேர்ந்து நடிக்கும் கதைகள்
நிறைய பேர் கேட்ப்பாங்க. நீ தனியா நடித்தால் தான் உனக்கு ஒரு அடையாளம் இருக்கும்னு அப்பா சொல்வார். சேர்ந்து நடித்தால் கதையே மாறிடும்னு சொல்வார்
மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்க ஆசை
எல்லா நடிகர்களுக்கும் இருப்பது போல் அவர் படத்தில் நடிக்க எனக்கும் ஆசை இருக்கு.
நடிக்க விரும்பும் கேரக்டர், யாருடன் நடிக்க ஆசை
வயதான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். தமிழில் நடிகர் விஜய் சேதுபதி உடன் நடிக்க ஆசை
அதிதி, காஜல் என 2 ஹீரோயின் இருக்காங்களே
இந்த படம் செய்யும் முன்னாடியே அதிதி பிரண்ட். காஜல் அகர்வால் உடன் முதல் முறை நடிக்கிறேன். காஜல் சின்சியர், கேரக்டரில் தான் இருப்பாங்க, படப்பிடிப்பு முடிந்ததும் நல்லா பேசுவாங்க. இந்த படத்தில் 2 ஹீரோ, நான் ஹீரோயின் மாதிரி தான்.
நடிகர் ஆவேன் என நினைத்தீர்களா
படிக்கும் போது நினைக்கலை.... ரொம்ப வெட்கப்படுவேன்.