ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் |

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்தப்படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து படத்தில் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதேசமயம் எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜெய் பீம் படம் எடுக்கப்படவில்லை என்று சூர்யா ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் பாமகவினர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி வந்தனர்.
இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ஆம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இதையடுத்து கடலூரில் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு தியேட்டர் அதிபர்களுக்கும் அப்படத்தை வெளியிடக் கூடாது என்று பாமக சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். குறிப்பாக, வன்னியர் மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காத வரை அவரது படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் நாளை எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.




