நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பாவனி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியின்போது அபினய் உடனான காதல் தோற்றம், அமீரின் முத்த சர்ச்சை என தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தபோதும் 100 நாட்களும் பிக்பாஸ் வீட்டில் இடம் பிடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனியிடத்தில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவது குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு போகவில்லையே என்று வருத்தமாக உள்ளது. மீண்டும் என்னை அழைத்தால் சிம்புவுக்காக நான் செல்வேன். அந்தளவுக்கு அவர் மிக அருமையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அடுத்த முறை சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது எனக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பேன் என தெரிவித்திருக்கிறார் பாவனி.