ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

'பீஸ்ட்' படத்தில் அனிருத் இசையில் இடம் பெற்றுள்ள 'அரபிக்குத்து' பாடல் முதல் சிங்கிளாக யு-டியுபில் வெளியிடப்பட்டது. உடனடியாக சூப்பர் ஹிட்டான இந்தப் பாடல் மிகக் குறைந்த நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல் என்ற சாதனையைப் படைத்துள்ளது. தற்போது 139 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளது.
இப்பாடலுக்கு பல சினிமா பிரபலங்களும் நடனமாடி குட்டி குட்டியான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது தோழியுடன் இணைந்து நடனமாடி வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைக் கடந்து 5 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது கீர்த்தியின் 'அரபிக்குத்து' வீடியோ.
“பார்ட்டிக்கு நான் வேண்டுமானால் கடைசியாக இருக்கலாம், ஆனால், 'அரபிக்குத்து' என்று வந்துவிட்டால் எப்போதும் குறைவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் அவரது தனி ஆல்பமான 'காந்தாரி' பாடலுக்காக நடனமாடிய ஒரு குட்டி வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அது 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த 'அரபிக்குத்து' வீடியோ அதைக் கடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.




