இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின் தெலுங்கிற்குச் சென்று அங்கு பிஸியான நடிகையாகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பீஸ்ட்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
பிரபாஸ் உடன் பூஜா கதாநாயகியாக நடித்துள்ள பான்--இந்தியா படமான 'ராதேஷ்யாம்' இந்த வாரம் மார்ச் 11ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காக பிஸியாக பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார் பூஜா.
அப்படத்திற்கான பேட்டி ஒன்றில் யாரைக் காதலிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “காதலிக்க நேரமில்லை. ஒரு வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடித்து வருகிறேன். காதலிக்க நிறைய நேரம் தேவைப்படும், அப்போதுதான் காதல் வளரும். ஆனால், இப்போது எனக்கு அதற்கான நேரமில்லை,” என்று பதிலளித்துள்ளார்.
ஒருவேளை நேரம் கிடைத்தால் காதலிப்பார் போலிருக்கிறது.