மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துள்ள விக்ரம் அடுத்தபடியாக பா.ரஞ்சித் இயக்கும் தனது 61வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ள பா.ரஞ்சித், இந்த மாத இறுதியில் விக்ரம் நடிக்கும் படத்தை தொடங்குகிறார்.
மேலும், சார்பட்டா பரம்பரை படத்தை வட சென்னையில் நடைபெற்ற குத்துச் சண்டையை மையமாகக் கொண்ட கதையில் இயக்கிய ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது படத்தை காதல் கதையில் இயக்கி இருக்கிறார். இந்நிலையில், விக்ரம் நடிக்கும் படத்தை கன்னடத்தில் உருவான கேஜிஎப் படத்தைப் போன்று கோலார் தங்கச் சுரங்க பின்னணி கொண்ட கதையில் இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தங்கச் சுரங்கங்களில் நடைபெற உள்ளது.