மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். இந்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இந்தப்படத்தில் பிகில் படத்தில் நடித்த இந்திரஜாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அதிதி ஷங்கருடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் இந்திரஜா. அதோடு, உண்மையான நண்பர்கள் எப்போதும் ஆத்மார்த்தமாக இருப்பார்கள். இந்த வாக்கியம் அதிதி ஷாங்கருக்கு சொல்வது போல் உள்ளது என்றும், நாம் இருவரும் ஒரே விதமான ஆத்மாதான் என்றும் பதிவிட்டுள்ளார் இந்திரஜா.
அதோடு விருமன் படத்தின் படப்பிடிப்பில் நான் சந்தித்த மிகவும் அற்புதமான நபர் நீங்கள்தான். வேறொரு அம்மாவிடமிருந்து எனக்கு கிடைத்த அக்கா என்றும், படப்பிடிப்பில் நடந்த அனைத்து மகிழ்ச்சிகளையும் நான் மிஸ் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார் இந்திரஜா. மேலும் ஒரு மிகப்பெரிய இயக்குனரின் மகள் என்பதை கொஞ்சம் கூட காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகுனீர்கள். உங்களிடம் இருந்த போது நான் சவுகரியமாக உணர்ந்தேன். நீங்கள் வாழ்வில் மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன், லவ் யூ தேனு என்றும் பதிவு செய்துள்ளார்.




