முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
கடந்த 1993ம் ஆண்டில் அர்ஜுன் நடிப்பில் ஜென்டில்மேன் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். அதன் பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கியவர், முதல்வன் படத்தை ஹிந்தியில் நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதைத் தொடர்ந்து தமிழில் மட்டுமே படங்களை இயக்கி வந்தவர், கடந்த 2024ம் ஆண்டு ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். ஆனால் அந்த முதல் படமே ஷங்கருக்கு தோல்வியாக அமைந்துவிட்டது.
அதேபோன்றுதான் தமிழில் கார்த்தி நடித்த விருமன் படத்தில் அறிமுகமான அவரது மகளான அதிதி ஷங்கர், அதன் பிறகு மாவீரன், நேசிப்பாயா போன்ற படங்களில் நடித்தார். பைரவம் என்ற படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். கடந்த மே மாதம் 30ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் அதிதி ஷங்கருக்கு தோல்வியாக அமைந்துவிட்டது. அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் மற்றும் அவரது மகள் அதிதி ஆகிய இருவருக்குமே தெலுங்கில் அறிமுகமான முதல் படமே தோல்வி படமாக அமைந்துவிட்டன.