சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு |
சென்னை : கொரோனாவால் திரையுலகினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியா முழுக்க எல்லா மொழிகளிலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
உலக மக்களின் ஒட்டு மொத்த கவலையே எப்போது கொரோனா நோய் முழுமையாக ஒழியும் என்பது தான். புதிது புதிதாக இந்த நோய் தொற்று உருமாறி வருவதால் உலகமே கலங்கி போய் உள்ளது. தற்போது இந்நோய் தொற்று ஒமிக்ரான் வடிவில் உலகை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா அலை மீண்டும் வேகம் எடுத்துள்ளது. திரையுலகினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உள்ள கலைஞர்களும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
கமல், வடிவேலு, சுராஜ் உள்ளிட்டோர் இந்நோய் தொற்று ஆளாகி குணமாகினர். இப்போது தமிழில் சத்யராஜ், திரிஷா, ஷெரின், விஷ்ணு விஷால், தெலுங்கில் மகேஷ்பாபு, தமன், லட்சுமி மஞ்சு, ஹிந்தியில் அர்ஜூன் கபூர் குடும்பம், கரீனா கபூர், ஸ்வரா பாஸ்கர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இன்று(ஜன., 10) நடிகைகள் ஷோபனா, குஷ்பு ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஷோபனா ஒமிக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தளபதி, இது நம்ம ஆளு உள்ளிட்ட தமிழில் ஏராளமான படங்களிலும், தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள ஷோபனா நடிப்போடு நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக உள்ளார். நடன பள்ளியும் நடத்தி வருகிறார்.
ஒமிக்ரான் நோய் தொற்றுக்கு ஆளானது பற்றி ஷோபனா கூறுகையில், ‛‛அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதில் எனக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உடல்வலி, குளிர் நடுக்கம் போன்றவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் இந்த வகை வைரஸில் இருந்து 85 பாதுகாப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த வைரஸ் தொற்று இந்த ஒமைக்ரான் உடன் முடிவுக்கு வர வேண்டும் ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார்.
குஷ்பு கூறுகையில், ‛‛இரண்டு அலைகளை கடந்து வந்த பின் இறுதியாக கோவிட் என்னை தொற்றிக் கொண்டது. நேற்று மாலை வரை நெகட்டிவ்வாக இருந்தது. இன்று பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தது. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறேன். தனியாக இருப்பதை வெறுக்கிறேன். எனவே அடுத்த 5 நாட்களுக்கு என்னை மகிழ்ச்சியாக வைக்கவும். ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றார்.