ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இந்தியாவில் கொரோனா அலை மீண்டும் வேகம் எடுத்துள்ளது. திரையுலகினரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சத்யராஜ், திரிஷா, மகேஷ்பாபு, தமன், லட்சுமி மஞ்சு, விஷ்ணு விஷால், ஸ்வரா பாஸ்கர் என எல்லா மொழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நடிகை ஷோபனா ஒமிக்ரான் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
தளபதி, இது நம்ம ஆளு உள்ளிட்ட தமிழில் ஏராளமான படங்களிலும், தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ள இவர் நடிப்போடு நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக உள்ளார். நடன பள்ளியும் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒமிக்ரான் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதில் எனக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உடல்வலி, குளிர் நடுக்கம் போன்றவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதால் இந்த வகை வைரஸில் இருந்து 85 பாதுகாப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த வைரஸ் தொற்று இந்த ஒமைக்ரான் உடன் முடிவுக்கு வர வேண்டும் ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார்.