சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
தெலுங்கு முன்னணி இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் "புஷ்பா". 4 மொழிகளில் வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார்.
இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் திரையரங்குகளில் நல்ல வசூலை பார்த்தது. கடந்த வாரம் ஓடிடியில் வெளியானது. இதனையடுத்து, இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்களும் தனது தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல இயக்குனரான செல்வராகவன் புஷ்பா படத்தை பாராட்டி இருக்கிறார்.
அதில் "வாவ். சூப்பர் திரைப்படம். இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக தனது பணிகளை செய்துள்ளனர். மேலும் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் நான் அடிமை ஆகி விட்டேன்" என பாராட்டி பதிவிட்டுள்ளார்.