சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
நடிகை பூனம் பஜ்வா, தமிழில் சேவல் படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது அப்பாவித்தனமான நடிப்பு அனைவரது மனதையும் வென்றது. பின்னர் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்கள் வரை கட்டுக்கோப்பாக காணப்பட்ட பூனம் பின்னர் சற்று உடல் பருமன் கூடினார்.
பின்னர் சுந்தர் சி நடித்த முத்தின கத்திரிக்கா மற்றும் ஜி.வி.பிரகாஷின் குப்பத்து ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்தார். உடல் எடை கூடி காணப்பட்டதால் இவருக்கு சில காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைந்துள்ளவர் தனது பழைய பார்முக்கு வந்துள்ளார். அதையடுத்து தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது வெல்வெட் வடிவிலான உடையில் செம கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.