நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நேரடி தமிழ்த் திரைப்படப் பாடல்கள் அளவிற்கு ஒரு டப்பிங் படத்தின் பாடல் ரசிகர்களை சென்றடைந்திருக்கிறது. அது 'புஷ்பா' படத்தில் இடம் பெற்றுள்ள 'ஓ சொல்றியா மாமா' லிரிக் வீடியோ. யு டியூபில் வெளியான இரண்டு வாரங்களிலேயே 30 மில்லியன் பார்வைகளை அதாவது, 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இந்தப் பாடலை ரசிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.
தெலுங்கில் 100 மில்லியன் பார்வைகளை இப்பாடல் நெருங்கி வருகிறது. இப்பாடல் குறித்து சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன், “இப்பாடல் மீது முதலில் சமந்தாவுக்கு நம்பிக்கையில்லை. நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு அவர் நடித்துக் கொடுத்தார். இப்போது பாடல் உலக அளவில் பெரிய ஹிட் ஆகிவிட்டது,” என்றார்.
அவரது பேச்சைக் குறிப்பிட்டு சமந்தா, “இனி எப்போதும் உங்களை நம்புவேன்,” என பதிலளித்துள்ளார். சமந்தாவின் பதிவிற்கு ஹார்ட்டின் எமோஜி பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன்.