ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்கில் நானி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஷியாம் சிங்கா ராய். இதில் நானியுடன் சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளனர். தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சாங்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி உள்ள இந்த படத்தில் சாய்பல்லவி தேவதாசியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், கன்னடம் மலையாள மொழிகளிலும் வருகிற 24ம் தேதி வெளிவருகிறது. சென்னையில் நடந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில்
இதுகுறித்து சாய்பல்லவி பேசியதாவது: எப்போதுமே நான் ஒரு கதையை படிக்கும்போது, மனதில் விஷுவல் தமிழில் தான் தெரியும். தமிழகத்தில் பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம். பல தடவை இந்த கதைகள் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோணும். இந்த படக்கதை படிக்கும்போது, நம் மொழியில் எடுக்கலாமே என தோன்றியது. அப்போது தயாரிப்பாளர் நாலு மொழியில் எடுப்பதாக சொன்னார் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
தமிழ் படம் பார்க்கும் உணர்வை இந்த படம் தரும். இப்படத்தில் தேவதாசியாக நடித்திருக்கிறேன். இதற்காக அவர்களை பற்றி சில விஷயங்கள் கேட்டும், படித்தும் தெரிந்து கொண்டேன். இயக்குநர் குழுவும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், படத்திற்கு தேவையானதை செய்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.