மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கைலா படத்தை தொடர்ந்து பூதோ பாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு தோப்புக்கரணம் என்று தலைப்பிட்டுள்ளனர். கோகன், அக்ஷய், நிரஞ்சன், ரிஷி, சந்துரு ஆகிய ஐந்து புதுமுகங்கள் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர்.
படத்தின் கதாநாயகியாக தர்ஷிணி டெல்டா அறிமுகமாகிறார். இவர் நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் படத்தின் தயாரிப்பாளர் பாஸ்கர் சீனுவாசன், மிஸ்டர் இண்டியா ஸ்டீவ் ஆகிய இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.
இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் கூறியதாவது : இஞ்சினியரிங் முடித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றி திரியும் 5 இளைஞர்கள் அந்த ஏரியாவில் தாதாவாக வலம் வரும் வரதனிடம் வேலைக்கு சேர முயற்சிக்கிறார்கள். ஒரு சூழ்நிலையில் தாதா வரதன் கடுப்பாகி இந்த ஐந்து பேரை நடு ரோட்டில் தோப்புக்கரணம் போட வைக்கிறார். அதனால் அவமானத்திற்குள்ளான அந்த 5 பேரும் இறுதியில் தாதா வரதனை தோப்புக்கரணம் போட வைப்பதே படத்தின் திரைக்கதை.
படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு சென்சார்க்கு அனுப்பினோம், படத்தை பார்த்த சென்சார் குழுவினர் யூ சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர். படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளும், வசனங்களும் இருப்பதாக கூறி ‛ஏ' சர்டிபிகேட் வழங்கியுள்ளனர் என்றார்.