ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கடந்த நவம்பர் 2-ந்தேதி பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தபோது, அவரது சினிமா சாதனைகளை தான் பாராட்டியதாகவும், ஆனால் தனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அவர் தன்னை இழிவுபடுத்தியதோடு, தனது சாதியை தவறாக குறிப்பிட்டதாகவும் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகாகாந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலானர் ஜான்சன் மீது ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் தன்னை தாக்கியதாகவும் அதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்துள்ள மகாகாந்தி, தான் அவர்களை தாக்கியது போன்று அவதூறு செய்தி பரப்பி விட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற ஜனவரி 4-ந்தேதி விஜய் சேதுபதி, ஜான்சன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.




