லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சென்னை : புஷ்பா படத்தில் சமந்தா ஆடி உள்ள ஓ சொல்றியா பாடல் ஆண்களை தவறாக சித்தரிப்பதாக கூறி எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐதராபாத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் ஆண்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் உருவாகி உள்ள ‛பான்' இந்தியா படம் புஷ்பா. டிசம்பர் 17ல் திரைக்கு வர உள்ள இப்படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சில தினங்களுக்கு முன் இந்த படத்தில் நடிகை சமந்தா ஆடி உள்ள கவர்ச்சி குத்தாட்ட பாடலான ஓ சொல்றியா மாமா என்ற பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டனர்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் சந்திரபோஸ் (தெலுங்கு) மற்றும் விவேகா (தமிழ்) ஆகியோர் எழுதியுள்ள இந்த பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடி உள்ளார். 20 மில்லியனுக்கு அதிகமான பார்வைகள் இந்த பாடலுக்கு கிடைத்துள்ளது. இந்தநிலையில் இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் அனைத்தும் ஆண்கள் சமுதாயத்தையே மிகவும் மோசமாக சித்தரிக்கும் விதமாக இருப்பதாகவும், ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்திலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்தில் உள்ள ஆண்கள் சங்கம் இந்த பாடல் ஆண்களை தவறாக சித்தரிக்கிறது, இளஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் உள்ளது என கூறி இந்த பாடலை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் பாடலை பாடிய ஆண்ட்ரியா, நடனம் ஆடிய சமந்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளனர்.