23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து நடிகர் அஜித் - இயக்குனர் வினோத் - தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் உருவாகி உள்ள படம் வலிமை. ஹூயுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கொரோனா உள்ளிட்ட பல தடைகளை கடந்து இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. வருகிற பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் முன்னோட்ட வீடியோ, நாங்க வேற மாறி, அம்மா பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
முழுக்க முழுக்க படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டன என்பதை விளக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. கூடவே கொரோனாவால் படப்பிடிப்பு தடைப்பட்டது, ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டது உள்ளிட்ட விஷயங்களையும் இதில் இணைத்துள்ளனர். குறிப்பாக இந்த படத்தில் வரும் வீலிங் காட்சி ஒன்றில் அஜித் நடித்துள்ளார். அதை படமாக்கியபோது அஜித் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இருப்பினும் அசராத அஜித் வீழ்ந்தாலும் திரும்ப எழுவோம் என்பதை நிரூபிக்கும் விதமாக அந்த பைக் வீலிங் காட்சியை அசத்தலாக நடித்துள்ளார். வீடியோவில் இடம் பெற்ற இந்த காட்சியை பற்றி குறிப்பிட்டு அஜித்தின் அசராத முயற்சியை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
‛வலிமை' மேக்கிங் வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே சமூகவலைதளங்களில் வைரலாகி டிரெண்ட் ஆகி லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றது.