மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அசோக் செல்வன், மணிகண்டன், அபி, நாசர், கேஎஸ்.ரவிக்குமார், பானுப்பிரியா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛‛சில நேரங்களில் சில மனிதர்கள்''. விஷால் வெங்கட் இயக்கி உள்ளார். உணர்வுப்பூர்வமாக உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் பங்கேற்று நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: சினிமாவுக்கு சாதி, மதம் கிடையாது. தியேட்டரில் விளக்கை அணைத்து விட்டால் அங்கு சாதி, மதம் காணாமல் போய்விடும். இங்கு ஆர்வம், திறமை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. எங்களை பார்த்து புதியவர்கள் வியக்க வேண்டாம். நாங்கள் செய்த தவறை நீங்கள் செய்யாமல் இருந்தால் போதும். குப்பத்திலும், மழைநீரிலும் நடந்து சென்ற போது வராத கொரோனா நான் அமெரிக்கா துபாய் போய்விட்டு வந்த பின் வந்து விட்டது. யாரும் அஜாக்கிரதையாக இருக்காதீர்.
இவ்வாறு அவர் பேசினார்.