செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ராஜமவுலி இயக்கத்தில், மரகதமணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் 5 மொழிகளில் வெளியானது. டிரைலருக்கு அனைத்து மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த டிரைலரை படத்தின் எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத் 'எடிட்' செய்யாமல் சென்னையைச் சேர்ந்த வேறொரு எடிட்டர் எடிட் செய்திருக்கிறார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று ராஜமவுலி, “இந்த கர்ஜனையான வரவேற்புக்கு ஒருவரின் திறமைதான் சிறந்த காரணம், அவர் எடிட்டர் பிரவீண். அவர்தான் 'ஆர்ஆர்ஆர்' டிரைலரை கட் செய்தார். உங்கள் நேரத்திற்கும், பொறுமைக்கும், முயற்சிக்கும் நன்றி பிரதர்,” என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு படத்திற்கு அதன் டீசர், டிரைலருக்குக் கிடைக்கும் வரவேற்பு மிக முக்கியமானது. 'ஆர்ஆர்ஆர்' போன்ற பான் - இந்தியா படங்களின் டிரைலர்கள் பெரும் சாதனை படைத்தால் தான் அதற்கான வரவேற்பையும், வசூலையும் பெற முடியும். அதற்கு எடிட்டர் பிரவீண் ஆண்டனி காரணமாக இருந்திருக்கிறார்.
'ஆர்ஆர்ஆர்' ஹிந்தி டிரைலர் தற்போது 40 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 31 மில்லியன், கன்னட டிரைலர் 6 மில்லியன், தமிழ் டிரைலர் 6 மில்லியன், மலையாள டிரைலர் 3 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளன.