நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சில நடிகைகள்தான் முன்னணி நடிகைகளில் இருக்கிறார்கள். அவர்களில் நயன்தாரா, சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் முக்கியமானவர்கள். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இவர்கள் முன்னணி நடிகைகளாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
எந்தவிதமான டிரஸ்களும் அவர்களுக்குப் பொருத்தமாக இருப்பதும், பாடல் காட்சிகளில் அவர்கள் தங்களை மிக அழகாகக் காட்டிக் கொள்ள விதவிதமான கிளாமர் ஆடைகளை அணிவதையும் ரசிகர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட நடிகைகள் நால்வருக்குமே வயது 30ஐக் கடந்துவிட்டது. இருந்தாலும் அவர்கள் 20 + நடிகைகளுடன் போட்டி போடும் அளவிற்கு நடித்து வருகிறார்கள்.
நடிகை சமந்தா 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் யு டியூபில் வெளியானது. தென்னிந்திய மொழிகளில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற சாதனையையும் படைத்தது. அந்தப் பாடலில் சமந்தாவின் கிளாமரான ஆடை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
ஏற்கெனவே நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால் அப்படியான கிளாமர் ஆடையில் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், அவர்களுக்குக் கிடைக்காத வரவேற்பு சமந்தாவுக்குக் கிடைத்துள்ளது.