ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' |
கிச்சா சுதீப் நடிப்பில் கன்னடத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படம் விக்ராந்த் ரோணா. கன்னடத்தில் உருவானாலும் இந்த படம், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் வெளியாகிறது. இதுதவிர 10க்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது. அதோடு இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் ஆக்ஷன் அட்வென்ஜர் படம்.
கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, மற்றும் ஜாக்குலின் பெர்ணான்டஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர்.
தற்போது இந்த படம் வருகிற பிப்ரவரி 24ம் தேதி 55 நாடுகளில் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் அனூப் பண்டாரி கூறியதாவது: விக்ராந்த் ரோணா திரையரங்க அனுபவத்திற்காகவென்றே உருவாக்கப்பட்டது. இதன் பிரமாண்ட உருவாக்கமும் 3டி தொழில்நுட்பமும், வெள்ளித்திரையில் அனுபவிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும்.
நாங்கள் அறிமுகம் செய்யும் உலகின் புதிய நாயகனை விரும்பி ஏற்று ரசிக்கும் பார்வையாளர்களை கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரையும் கவரும் அட்டகாசமான விருந்தாக இருக்கும். பிப்ரவரி 24, 2022 அன்று உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் காண மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம். என்கிறார்.