விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

‛துப்பறிவாளன்' படம் தந்த வெற்றியால் இயக்குனர் மிஷ்கின் - நடிகர் விஷால் கூட்டணியில் ‛துப்பறிவாளன் 2' பட அறிவிப்பு வெளியானது. லண்டனில் பட வேலையை துவக்கினர். ஆனால் இருவரிடையே பிரச்னை ஏற்பட மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். அதன்பின் ஒருவரை ஒருவர் மாரி மாரி விமர்சனம் செய்து வந்தனர். பிறகு இந்த படத்தை தானே இயக்க போவதாக விஷால் அறிவித்தார். ஆனால் படப்பிடிப்பு துவங்கவே இல்லை. தொடர்ந்து மற்ற படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் கதையில் சில மாற்றம் செய்து வரும் விஷால், 2022 ஏப்ரல் முதல் படப்பிடிப்பை லண்டனில் துவங்க போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக புது போஸ்டரை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். படத்தின் கதைக்களம் லண்டனில் நிகழ்வது போன்று உருவாகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்க, இளையராஜா இசையமைக்க உள்ளார்.




