ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விநோதய சித்தம். இந்தப்படத்தில் மகாலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அறிமுக நடிகை ஷெரீனா. கேரளாவில் பிறந்து பெங்களூரில் வளர்ந்து, படிப்பை முடித்தபின் விமான பைலட் ஆக நினைத்தவர், எதிர்பாராத விதமாக மாடலிங்கில் நுழைந்து அப்படியே நடிகை ஆகிவிட்டார்.
சினிமா பயணம் குறித்து அவர் கூறியதாவது: நான் படிப்பை முடித்திருந்த சமயம். ஒருநாள் ஏதேச்சையாக தோழிகளுடன் ஷாப்பிங் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கே மிஸ்.பெமினா அழகிப் போட்டிக்கான ஆடிசன் நடந்து கொண்டிருந்தது. தோழிகளின் தூண்டுதலால் நானும் அதில் போட்டியாளராக கலந்துகொண்டேன். ஆச்சர்யமாக, பங்கேற்ற 14 போட்டியாளர்களில் நான் மிஸ்.பெமினா அழகி ஆனேன். அதன் பிறகு மாடலிங்கில் கவனம் செலுத்த துவங்கினேன்.
அதன்பிறகு சர்வதேச அளவில் நடக்கும் ஷோக்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். சூப்பர் மாடல் ஆப் இண்டியா போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றேன். அது எனது பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அதன்பின் விதவிதமான பேஷன் ஷோக்கள், விதவிதமான டிசைனர் ஷோக்கள், விளம்பரப்படங்கள் என நடித்தேன்.
அதன்பிறகு சினிமா வாய்ப்பு வந்தது. சுப்புராம் என்பவர் இயக்கத்தில் அஞ்சாமை படத்தில் கதாநாயகியாக நடித்தேன். ரகுமான், விதார்த் என முதல் படத்திலேயே சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் ஒரு விளம்பரப்படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தேன். அந்த அறிமுகம்தான் விநோதய சித்தம் படத்தில் நடிக்க வாய்ப்பாக அமைந்தது.
அஞ்சாமை படத்தில் சீக்ரெட் ஜர்னலிஸ்ட்டாக நடித்துள்ளேன். இதில் எனக்கு பலவித கெட்டப்புகளும் உண்டு. இந்தப்படம் தான், நான் நடித்த முதல் படம் என்றாலும் விநோதய சித்தம் முதலில் வெளியாகி விட்டது. இந்தபடம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது என்கிறார் ஷெரீனா.