ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கன்னட முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்த 29ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புனித் ராஜ்குமார் தமிழ் படங்களில் நடிக்காவிட்டாலும், அவரது படத்தில் தமிழ் இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளார்கள். பல தமிழ் நடிகர்கள் அவருடன் நட்பாக இருந்தார்கள்.
புனித் ராஜ்குமார் சமாதிக்கு சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பிரபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து சூர்யா நேற்று பெங்களூருக்கு சென்று புனித் ராஜ்குமார் சமாதியில் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். சூர்யாவுடன் சிவராஜ்குமாரும் உடன் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா கூறியதாவது: புனித் மரணம் என்பது நடந்திருக்கக்கூடாத ஒன்று. அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. என் குடும்பமும் அவரது குடும்பமும் ஆரம்பகாலத்திலிருந்து நெருக்கமானது. நான் என் தாயின் வயிற்றில் 4 மாத கருவாக இருந்தபோது அவரும் அவரது தாயார் வயிற்றில் 7 மாத கருவாக இருந்ததாக எனது தாய் கூறியிருக்கிறார். எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் அவர், ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அவர் மரணமடையவில்லை நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு மனவலிமையை கொடுக்க இறைவனை வேண்டுகிறேன். என்றார்.