ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ராஜமவுலி இயக்கி உள்ள ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரணுடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக நடித்திருக்கிறார் ஜூனியர் என்டிஆர். இப்படம் வருகிற ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ப் வீடியோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது.
இந்த நிலையில் அடுத்தபடியாக தான் நடிக்கும் படத்திற்காக பாடி லாங்குவேஜை மாற்று முயற்சியாக கடினமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் ஜூனியர் என்டிஆர். அதற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அவரது கையில் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோரும் கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.