ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழில், காதல் கண் கட்டுதே, ஏமாளி, நாடோடிகள்-2, சுட்டு பிடிக்க உத்தரவு, கேப்மாரி உள்பட பல படங்களில் நடித்தவர் அதுல்யா ரவி. தற்போது முருங்கக்காய் சிப்ஸ், எண்ணித்துணிக ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி அகிலை நாயகனாக வைத்து இயக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏஜென்ட் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் மம்முட்டியும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அதோடு சாக்ஸி வைத்தியா என்பவர் நாயகியாக கமிட்டாகி இருக்கும் நிலையில், இன்னொரு நாயகியாக அதுல்யாவிடம் பேசி வருகின்றனர்.
தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாத அட்டக்கத்தி நந்திதா, நிவேதா பெத்துராஜ், நிவேதா தாமஸ் போன்ற நடிகைகள் தெலுங்கிற்கு சென்று நடித்து வரும் நிலையில் தற்போது அதுல்யா ரவியும் ஏஜென்ட் படம் மூலம் தெலுங்கில் சென்று நடிக்க உள்ளார்.




