சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்கு நடிகர் சங்கத்தின் தேர்தல் அக்டோபர் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ் ஒரு அணியாகவும், மோகன்பாபுவின் மகன் விஷ்ணுமஞ்சு இன்னொரு அணியாகவும் போட்டியிடுகிறார்கள். அந்த வகையில் தலைவர் பதவியை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும் என்று பிரகாஷ்ராஜ், விஷ்ணு மஞ்சு ஆகிய இருவருமே மாறி மாறி நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது விஷ்ணு மஞ்சு 14 அதிரடியான வாக்குறுதி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து தகுதியும் உள்ள மா உறுப்பினர்களுக்கு திரைப்படங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் வேலை கிடைக்க மா செயலி தொடங்கப்படும். தெலுங்கு நடிகர் சங்கமான மாவிற்கு சொந்த கட்டடம் கட்டப்படும். தகுதியான மா உறுப்பினர்களுக்கு சொந்த வீடு, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள்.
மா உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்யாண உதவி திட்டம், பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக உயர் அதிகாரக்குழு, மூத்த கலைஞர்களின் நலன் மற்றும் வாக்களிக்கும் உரிமை, அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை, மாநில - மத்திய அரசுகளின் அனைத்து திட்டங்களையும் எளிதாக்கி அனைத்து மா உறுப்பினர்களுக்கும் மோன்பாபு திரைப்பட நிறுவனத்தில் தள்ளுபடி, மா உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான திரைப்பட தயாரிப்புகள் மற்றும் இரட்டை மாநில தெலுங்கு அரசுகளின் கூடுதல் உதவி வழங்கப்படும் என்று நடிகர் விஷ்ணு மஞ்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.