மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
தெலுங்கு திரை உலகில் முன்னணி இளம் நடிகர்கள், சீனியர் நடிகர்கள் என பலர் இருக்கும் நிலையில் ஆச்சரியப்படத்தக்க வகையில் நடிகர் மோகன்பாபுவின் மகனான நடிகர் விஷ்ணு மஞ்சு கடந்த முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 'கண்ணப்பா' என்கிற படத்தை தயாரித்து அதில் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் என பான் இந்திய பிரபலங்களை நடிக்க வைத்து வரும் ஏப்ரல் மாதம் அந்த படத்தை ரிலீஸுக்கு தயார் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தனது தந்தை மோகன்பாபு உடன் சேர்ந்து சென்று நேரில் சந்தித்து அவரது செயல்பாடுகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்து தனது படத்திற்கான வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார் விஷ்ணு மஞ்சு. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தெலுங்கானா முதல்வரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவர் தெலுங்கு திரை உலக வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அவருடன் மேலும் திரையுலகம் குறித்த முக்கியமான பல விஷயங்களை விவாதித்தேன்” என்று கூறியுள்ளார்.
அதே சமயம் புஷ்பா-2 திரைப்படம் முதல் நாள் வெளியீட்டில் ஏற்பட்ட ஒரு பெண்ணின் அகால மரணம் தொடர்பாக படங்களை திரையிடுவதில் பல கண்டிப்பான விதிமுறைகளை முதல்வர் ரேவந்த் ரெட்டி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். அடுத்து தனது கண்ணப்பா திரைப்படம் பான் இந்தியா வெளியீடாக வெளியாக இருப்பதால் முன்கூட்டியே அது குறித்து சில விஷயங்களை விளக்கி படத்திற்கான சில சலுகைகளை பெறுவதற்காகவும் தான் விஷ்ணு மஞ்சு இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.